Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 06, 2019

கர்ப்பமுற்றிருந்த நாயை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம் !!

Currently online
நாயொன்றை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ள சம்பவமொன்று கம்பஹா - வத்தகமை பகுதியில் நேற்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது.

நீண்ட நாட்களாக கம்பஹா – வத்துருகம – கந்தஹேன பகுதியில் கர்ப்பமுற்றிருந்த நாயொன்று வீதியில் உலாவித் திரிந்துள்ளது.

இந் நிலையில் சம்பவ தினத்தன்று இனந்தெரியாத சிலரால் மேற்படி நாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.

எரிகாயங்களுக்குள்ளான நாயை பிரதேசவாசிகள் தெவலபொல கால்நடை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள கால்நடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் 10 மணிநேரத்திற்கு பின்னர் சிகிச்சைபலனின்றி குறித்த நாய் உயிரிழந்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.