Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 16, 2019

பாடசாலை சீருடையுடன் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் !!

Currently online
பாடசாலை சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் ஒருவனின் சடலம் நேற்று (15) இரவு மீட்கப்பட்டுள்ளது.

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின்  சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவன் கருங்கண்டல் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் ஜே.நிர்மலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் வழமை போல் நேற்று (15) காலை பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற மாணவன் இரவாகியும் வீடு திரும்பவில்லை. 

இந் நிலையிலேயே குறித்த மாணவன் மணல்காடு பகுதியில் தூங்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலையில் மாணவனின் சடலம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.