Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 14, 2019

காதலர்_தினம் ...........!!!!!!!!! த. ஜிவிதன்

Currently online
ஓ மானிடா!!!!
இன்று உனக்கு
காதலர் தினம்
மகிழ்ச்சியுடன் 
வாழ்த்துக்கள்!

உன் காதலியை
சில மணிநேரம்
மகிழ்விக்க 
என் உயிருடன் 
என் காதலையும் பிரிப்பது
எவ்விதத்தில் நியாயம்!!!!

எனது காதலையும் 
என்னையும்
கொலைசெய்து அதனூடே
நீ ஒப்புவிக்கும்
காதலுக்குரியவள்
உனக்கானவள் என்பதற்கு
இன்னும் 
உத்தரவாதம் கூட 
இல்லையே!!!

என் இறப்பில் 
என் காதல் பிரிவில்
உன் காதல் ஆயினும்
உன்னதத்துடன்
வாழும் எனின்
நான் உயிருடன் 
காதலையும் தியாகம் 
செய்ததற்கு அர்த்தம் 
ஆவது கிடைக்கும் 
அதில் எனக்கும் மகிழ்வே!!!

ஆகவே மானிடா 
உத்தரவாதமற்ற
உன் காதலுக்காக 
என்னுயிர் பறிக்காதே!!!!

உத்தரவாதம்
உண்டெனில்
உன்னிடம் ஓர் 
விண்ணப்பம்!!!

உன் காதலிக்கு
என்னை பரிசளிக்கையில்
என் காதலியுடன் 
சேர்த்துப் பரிசளி
உன் காதல் வாழும் கணத்தில் 
என் காதலும் சில மணித்துளிகள் 
சேர்ந்தே வாழும்.

உன்னால் நானும் 
என்னை பிரிந்ததால் அவளும் 
தனித்தனியே 
உயிர்துறப்பதை விட
நாம் இருவரும்
ஒன்றாக உயிர்நீப்போம்
உத்தம காதலர்களாய்
உன்னவளின் கூந்தலில்.....!!!!!!!

இவ்வண்ணம்
காதலிக்கும் ரோஜாப்பூ.

நன்றி 
ஜிவிதன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.