Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 02, 2019

சிரியாவில் பரிதாபமாக பலியாகும் பச்சிளம் குழந்தைகள் !!

Currently online
கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிரியாவில் அரசுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மற்றொருபுறம் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். 

இவற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்றுவிட்டனர். அத்தோடு இந்த போரில் ஏதும் அறியாத அப்பாவி சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் செத்து மடியும் சோக நிகழ்வும் தொடர்கதையாக உள்ளது. 

குறித்த இந்த நிலையில் சிரியாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் சிக்கியும், இடம் பெயரும் போது உணவு தண்ணீர் கிடைக்காமலும் கடந்த 2 நாட்களில் மட்டும் 11 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்ததாக குழந்தைகளுக்கான ஐ.நா.வின் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

மேலும் இப்படி கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஒட்டுமொத்தமாக 32 குழந்தைகள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.