Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 06, 2019

கைதிகள் இருவர் தப்பி ஓட்டம் ; தீவிர தேடுதலில் பொலிஸார் !!!

Currently online
அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து மதவாச்சி சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற வழக்குகளில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட இரண்டு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். 

சிறைச்சாலை பேருந்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து அழைத்து செல்ல முற்பட்ட வேளையிலேயே கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். 

மதவாச்சி பூனேவ பிரதேசத்தைச் சேர்ந்த பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 24 வயதுடைய கைதி ஒருவரும், மதவாச்சி, மககனதராவ பிரதேசத்தைச் ​சேர்ந்த பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவருமே தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த கைதிகளை மீண்டும் கைது செய்வதற்காக மதவாச்சி பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.