Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 13, 2019

அழகில் இவள்...............!!!!!!!! சுஜா தவம்

Currently online
பக்கம் நிற்கும் பட்ட மரத்திலும்
பால் வடியுது பனி சாரல் தூவிட- 
அங்கே பைங்கிளி கீச்சிட பார்த்து
ரசிக்கும் குயில்களோடு இவளும்.

ஓடிடும் மேகத்துள் ஒழிந்திடும் நிலவை
தேடிடும் சூரியன் இவள் போல் - 
விண்மினி கூட்டத்தில் விளையாடி
வேதனை தீர்த்திடும் அழகோ அழகு

பூக்களும் சிரிக்கும் இவள் போல்
இளங்காற்றில் பொழியும் மழைத் 
தூறலில் இன்பத்தில் நனைந்து 
துன்பத்தை களைந்து அழகழகாய்.

இலையும் கிளையும் அதில் சிறு
மலரும் வண்டும் சில நொடி
காதல் கொண்டிட இவள் போல்
பெண்மை இதயமும் துடித்திட மறுக்குமோ.

கோடி அழகு என்னை சூழ்ந்து
கூடி குலவிட கண்கள் மூடுமோ
கனத்த மனம் தொடர்ந்து நீளுமோ
குட்டி ஆசைகள் ஓடி மறையுமோ

சுழலும் புவியோடு சுற்றும் அழகை
சூனியம் என்று விட்டு இவள்
சோகத்திலேயே துவண்டு விடுவாளோ
அத்தனை அழகும் அள்ளி பருகி
என் ஆசை தீர்த்திட மாட்டேனோ.

   நன்றி 
சுஜா தவம்


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.