Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 19, 2019

கனரக வாகனம் - முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து ; இருவர் பலி !!

Currently online
இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நாவலப்பிட்டி கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது ;
கம்பளையிலிருந்து கினிகத்தேனை நோக்கி, சென்ற முச்சக்கரவண்டியும் கினிகத்தேனை பகுதியிலிருந்து கம்பளை நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் பலியாகியதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கினிகத்தேனை பகுதியை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ.கலப்பத்தி(வயது-31) மற்றும் மீதலாவ குருந்துவத்த பகுதியை சேர்ந்த திலக்சிரிகே அமல் குணரத்ன(வயது-38) என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள நாவலப்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.