Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 25, 2019

வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு ; கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் !!

Currently online
வடக்கில் முழு அடைப்பு போராட்டம் இன்று (25) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வடக்கிலுள்ள பாடசாலைகள், அரச செயலகங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிலையங்கள் என்பன பூட்டப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துச் சேவையும் முற்றாக முடங்கியுள்ளது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர்  ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், வணிக அமைப்புகள், தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.