Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 23, 2019

அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா? நாளை பலப்பரீட்சை !!

Currently online
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (24) நடைபெறவுள்ளது.

இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.

இந்திய அணி சமீபத்தில் அவுஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது டெஸ்ட் தொடரையும், ஒரு நாள் தொடரையும் முதல் முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.

தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி அவுஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்தும் ஆர்வத்துடன் இருக்கிறது.

நியூசிலாந்து தொடரில் பாதியில் ஒய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இதே போல வேகப்பந்து வீரர் பும்ராவும் மீண்டும் களம் திரும்பி உள்ளார். ஆல்ரவுண்டர் ஹார்த்திக் பாண்ட்யா காயத்தால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகி உள்ளார். அவரது இடத்தில் ஜடேஜா தேர்வாகி இருக்கிறார்.

பேட்டிங்கில் ரோகித் சர்மா, தவான், டோனி, அம்பதி ராயுடு ஆகியோரும் பந்து வீச்சில் பும்ரா, யசுவேந்திரசஹால், கர்ணல் பாண்ட்யா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ் ஹோம் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் வேட்கையில் உள்ளது.

இரு அணிகளும் நாளை மோதுவது. 19-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 18 ஆட்டத்தில் இந்தியா 11-ல் அவுஸ்திரேலியா 6-ல் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் முடிவு இல்லை.

நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலி வி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.