Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 01, 2019

கத்தரிக்காய் ரைஸ் செய்ய நீங்களும் ரெடியா ??

Currently online
தேவையானவை: 

அரிசி - கால் கிலோ
பிஞ்சுக் கத்திரிக்காய் - 6
வெங்காயம் - ஒன்று
கடுகு - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று 
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை 
இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன் 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு தண்ணீர் விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி -பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.