Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 14, 2019

எச்சரிக்கை ; மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெறும் மோசடி !!

Currently online
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அறநெறி பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றது.

வார இறுதி நாட்களில் குறித்த பகுதியில் சகல மதங்களையும் சார்ந்த அறநெறிப் பாடசாலைகள் அவ்வப்பகுதி மத வழிபாட்டு தலங்களிலும் பொது இடங்களிலும் இடம்பெற்று வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத போதனைகளை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் போதைவஸ்து விற்பனையாளர்கள் சூட்சுமமாக  மாணவர்கள் வருகை தரும் போதும் வெளியேறிச் செல்லும் போதும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறு பிரதேச சர்வ மத அமைப்புகள் உட்பட சமூக நல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.