Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 04, 2019

வடமராட்சி பகுதியில் அகப்பட்டுள்ள மலைப் பாம்பு !!!

Currently online
வயல் அறுவடையின்போது யாழில் அரிதான மலைப் பாம்பு ஒன்று அகப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

13 அடி நீளமான இந்த மலைப் பாம்பு  வடமராட்சி, கரவெட்டி கிராய்ப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது முகநூல் பக்கத்தில் வயல் உரிமையாளர்கள் இதனை  பதிவேற்றியுள்ளனர். தமது வயலினை அறுவடை செய்தபோது இந்த மலைப் பாம்பு அங்கு பதுங்கிய நிலையில் காணப்பட்டதாக . தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் குறித்த பாம்புக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் வேறு தகவல்கள் கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்திய பாறை மலைப்பாம்பு இனத்தைச் சேர்ந்த இந்த பாம்புகள் இலங்கையின் வரண்ட நிலக்காடுகளையே விருப்பமான வாழிடங்களாக கொண்டுள்ளன. குறிப்பாக வன்னிப் பகுதிகளில் வாழும் இவை தமிழர்களால் வெங்கிணாந்திப் பாம்பு என அழைக்கப்படுகிறமை  குறிப்பிடத்தக்கதாகும்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.