Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 23, 2019

சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை விரைவில் சந்திக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு !!

Currently online
சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு அதிபரை விரைவில் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.

சீன உயர் மட்டக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை விரைவில் சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். 

சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை நிறுத்தி வைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 1க்குப் பிறகு நீட்டிக்கவும் டிரம்ப் முன்வந்துள்ளார்.

ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இதுவே சரியான வாய்ப்பு என்று இருநாடுகளும் கருதுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.