Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 12, 2019

பூஞ்செடி என நினைத்து கஞ்சா செடியினை வளர்த்தவருக்கு வந்த ஆப்பு !!

Currently online
கஞ்சா செடியினை பூஞ்செடி என நினைத்தே அதனை அழிக்காது விட்டேன் என , கஞ்சா வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக அமைப்பட்டு வரும் கட்டடம் ஒன்றிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பொலிஸார் அங்கு வளர்ந்த கஞ்சா செடியினை மீட்டதுடன் அங்கிருந்த தென்னிலங்கை தெல்தெனியை சேர்ந்த கட்டட தொழிலாளியையும் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நேற்று(11) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டார்.

அங்கு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , கட்டடத்தில் அந்த செடி தானாகவே வளர்ந்தது. அதனை பூஞ்செடி என நினைத்தே அகற்றாது விட்டேன். என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த நபரை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான காசு பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.