Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 19, 2019

வடிவேலுவின் இடத்தை கைப்பற்றுவாரா யோகி பாபு ?

Currently online
நடிகர் வடிவேலு – இயக்குநர் சிம்புதேவன் கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. 

2017-ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ குறித்த அறிவிப்பு வந்தது. இதன் ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டது. ஷங்கரின் ‘S பிக்சர்ஸ்’வுடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்து வந்தது.

இதனையடுத்து சிம்புதேவனின் ஸ்க்ரிப்டில் வடிவேலு தலையீடு செய்ததால் படம் ட்ராப்பானது. பின், ரூ.9 கோடி வடிவேலு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் தெரிவித்தார்.

அதன் பிறகு, வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாகவும், விரைவில் ஷூட்டிங் துவங்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

ஆனால், இதுவரை ஷூட்டிங் தொடங்கவில்லை. தற்போது, இதில் ஹீரோவாக பிரபல காமெடியன் யோகி பாபுவை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.