Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 08, 2019

யாழ்.பல்கலை மாணவன் மீது சரமாரி தாக்குதல் !!

Currently online
யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று(07) நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ப.சுஜீவன்  என்ற மாணவனே தாக்குதலுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


குறித்த மாணவன் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 4ஆம் வருட மாணவர்கள் சிலரால்  தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவன் சுஜீவனுக்கும் 4ஆம் வருட மாணவர்கள் சிலருக்கும் இடையே முறுகல் நிலை நீடித்தது.

நேற்றுமுன்தினம் மாணவன் சுஜீவனை யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெளியில் வைத்து பின்தொடர்ந்த 4ஆம் வருட மாணவர்கள் சிலர், அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முற்பட்டிருந்தனர். எனினும், வீதியில் பொதுமக்களின் போக்குவரத்து அதிகமாக இருந்த காரணத்தால் அந்த முயற்சி பயனளிவில்லை.

இந் நிலையில். நேற்று(07) பல்கலைக்கழக வளாகத்துக்குள் அந்த மாணவனைச் சூழ்ந்த 4ஆம் வருட மாணவர்கள் சிலர் அவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தினர்.

இதில் சுஜீவன் தலைப் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.