Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 18, 2019

விஜய்யின் படத்தில் இணைந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் பிரபலம் !!

Currently online
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக அறிமுகமான சிறுவன் கப்பீஸ் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும், படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 21ஆம் திகதி சென்னை பின்னிமில்லில் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் முதல் பாடலையும் படக்குழுவினர் படப்பிடிப்பு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா மற்றும் கிராமத்து பாடல்களை பாடி பாடகராக அறிமுகமான கப்பீஸ் பூவையர் ‘தளபதி 63’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒருபாடலைப் பாடுவதோடு ஒருசிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.