Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 21, 2019

தமிழைப் போற்றி பாதுகாத்து வளர்க்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் !!

Currently online
உலக தாய்மொழி தினத்தில், நம் தாய்மொழியான தமிழைப் போற்றி பாதுகாத்து வளர்க்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: 
மக்கள் தங்கள் தாய்மொழிகளை போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் பெப்ரவரி 21-ம் திகதியை உலக தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது.

திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியாகவும் சீரிளமை குன்றாத மொழியாகவும் வளமையும் தூய்மையும் மிக்க மொழியாகவும் மொழிக்கு மட்டுமின்றி வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும் உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க மொழியாகவும் விளங்கும் தமிழ் மொழியை இந்த இனிய நாளில் போற்றிட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.