Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 05, 2019

வடக்கின் ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்­பது என்ன....?

Currently online
நீண்ட தூரம் பின் தொடர்ந்து சென்று கஞ்சா கடத்தல்கார்களை சென்று மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து 77 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை விசேட புலனாய்வு துறை உத்தியோகஸ்தர்கள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தெரியவருவது விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, கடத்தல்கார்கள் இருவரை யாழ் நகர் பகுதியில் இருந்து தென்மராட்சி பகுதி வரையில் பின் தொடர்ந்து, தென்மராட்சி எல்லை பகுதியில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.

மேலும்  குறித்த நபர்களிடம்  இருந்து 77 கிலோ 340 கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டதுடன் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கஞ்சா போதைபொருளையும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் வடமராட்சி மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 27 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.