Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 21, 2019

இளைஞனின் உயிரைப் பறித்த பந்து !!

Currently online
கிரிக்கெட் விளையாடும்போது மார்பில் பந்து தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள கீழக் கழனி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(21). சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கிரிக்கெட் விளையாட்டில் ஓபன் பேட்ஸ்மேனான இவர் கல்லூரியில் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, பல்வேறு கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு அதிக ரன்களைக் குவித்துள்ளார்.

இந் நிலையில், கடந்த 17-ம் திகதி ஆதனூர் ஏரியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் நிஜ காரட் பந்தை வைத்து விளையாடியுள்ளனர். 

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பந்து சீனிவாசன் இடது பக்க மார்பில் பட்டது. இதில் நிலை குலைந்த சீனிவாசன் மயங்கி கீழே விழுந்தார். இதனால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே சீனிவாசனை மீட்டு பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சீனிவாசனை பரிசோதனை செய்துவிட்டு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.