Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 20, 2019

தாய்லாந்து இளவரசருக்கு அரச மரக்கன்று பரிசளித்த ஜனாதிபதி !!

Currently online
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்தின் 10ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

குறித்த மரக்கன்றை ஜனாதிபதி  சார்பில் தாய்லாந்துக்கு கொண்டு சென்ற புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, தாய்லாந்து இளவரசருக்கு ஜனாதிபதியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அரச மரக்கன்றையும்  நேற்று (19) கையளித்தார்.

முடி இளவரசருக்கு இராஜதந்திர ரீதியில் கிடைத்த முதல் பரிசு இதுவாகும்.

இந்த மகத்துவம் வாய்ந்த பரிசானது இரு நாடுகளுக்கிடையிலான நட்பின் அடையாளம் என்றும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா மற்றும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அந்நாட்டு விசேட பிரதிநிதிகளின் பங்களிப்பில் குறித்த அரச மரக்கன்று தாய்லாந்தின் அயோத்யா நகரில் அமைந்துள்ள வஜிரதம்மாராம விகாரையில் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.