Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 28, 2019

கானல் நீர்.............!!!!!! தோழி கவிதாயினி

Currently online
உன் கார்குழலை 
என் விரல்கள் கோதி
வருடல் செய்கிறேன் ...

உன் நெற்றிப் பரப்பில்
என் இதழ் பதித்து
முத்தம் இடுகிறேன்...

உன் குட்டி விம்பத்தை
என் ரெட்டை விழிக்குள்
பூட்டி மகிழ்கிறேன்...

உன் உயிர் மூச்சை
உறுஞ்சி நித்தம்
என் சுவாசம் வளர்க்கிறேன்...

உன் மீசை முடியை
என் பற்கள் கொண்டு 
கொய்ய முயல்கிறேன்...

உன் தாடி மயிர்களை
கருந்தோட்டமென்று 
மேய முனைகிறேன்...

உன் காதோரம் 
என் வாய் வைத்து
செல்லம் கொஞ்சுறேன்...

உன் தோள் மூட்டில்
என் தலை சாய்த்து
கவலை கொல்கிறேன் ...

உன் மார்போடு 
என் முகம் புதைத்து
துயிலும் கொள்கிறேன்...

உன் கரம் கோர்த்து
என் வாழ்க்கைப் பயணத்தை 
தொடர விளைகிறேன்..

உன் இதயவறைகளே
என் உலகவரையறையென
உணர்ந்து வாழ்கிறேன்...

உன் அரவணைப்பிற்குள்
எனை மறந்து - நான் 
மகிழ்ந்து வாழ்கிறேன் ...

உன்னை எனக்குள்
சேர்த்துக் கொண்டு 
கனவுலகில் வாழ்கிறேன்...

ஆம் 
கனவுலகில் மட்டுமே
கடந்தவையெல்லாம்
சாத்தியம்...இந்த
கலியுலகில்....

         நன்றி 
தோழி கவிதாயினி

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.