Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 13, 2019

பிரதமர் ரணில் நாளை வடக்கிற்கு விஜயம் !!

Currently online
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை (14) வடக்கிற்கு செல்லவுள்ளார்.

குறித்த விஜயத்தின்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

வலிகாமம் பிரதேச செயலகத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தை பிரதமர் ரணில் திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தலைமையில் கூட்டமொன்றை நடத்துவதற்கு நாளை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய இரு நாட்களும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.