Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 28, 2019

நம்பமுடியவில்லை ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு வாழ்த்துக்கள் ; விஷால் டுவீட் !!

Currently online
நடிகர் ஆர்யா தனது திருமண பத்திரிகையை நண்பரும், நடிகருமான விஷாலுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகர் ஆர்யா - சாயீஷா கஜினிகாந்த் படத்தில் நடித்த போது சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. 

இதையடுத்து இருவரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து இருவர் தரப்பிலும் விளக்கம் அளிக்காத நிலையில் காதலர் தினத்தன்று நடிகர் ஆர்யா சாயிஷா தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் மார்ச் மாதம் திருமணம் நடக்கவிருப்பதாக அறிவித்திருந்தனர்.

அதையடுத்து  திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,நடிகர் ஆர்யா தனது முக்கியமான நெருங்கிய  நண்பர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஆர்யா தனது நண்பரும், நடிகருமான விஷாலை நேரில் சென்று தனது திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார். அதற்கான புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஷால், 'இந்தப் புகைப்படம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. எனது நண்பனின் திருமண அழைப்பிதழ் என்கையில் இருப்பதை நம்பமுடியவில்லை. ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.

அதற்குப் பதில் தெரிவிக்கும் வகையில், ஆர்யா 'உன்னுடைய திருமண அழைப்புக்காகக் காத்திருக்கிறேன்' என்று அதில் பதிவிட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.