Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 14, 2019

கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடித்த ''தேவ்'' திரை விமர்சனம் !!

Currently online
கார்த்தி தமிழ் சினிமாவின் மிகப்பெரும் நம்பிக்கை நட்சத்திரம். கொஞ்சம் சறுக்கல் அடைந்தாலும், பல மடங்கு உயரமாக அடுத்தடுத்த படங்களில் வெற்றியை பெறுவார், அப்படித்தான், மெட்ராஸ், தோழா, கொம்பன் என்று வளர்ந்த இவரின் மார்க்கெட்டில் காற்று வெளியிடை கொஞ்சம் சறுக்க உடனே, தீரன், கடைக்குட்டி சிங்கம் என மிரட்டினார்.

தற்போது ஹாட்ரிக் வெற்றிக்காக தேவ் படத்தில் களம் இறங்க கார்த்திக் ஹாட்ரிக் அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்
கார்த்தி சிறு வயதிலிருந்தே அப்பாவின் அரவணைப்பில் வளர்கிறார். எதற்கும் அஞ்சாமல் தனக்கு பிடித்த வாழ்க்கையை அழகாக வாழ்கிறார்.

கார்த்தியுடன் நண்பர்கள் அமிர்தா, ஆர் ஜே விக்கி ஆகியோரும் பயணிக்க, விக்கிக்கு கார்த்தியை எப்படியாவது ஒரு பெண்ணுடன் கமிட் செய்ய வேண்டும், அப்போது தான் நாம் நம் வாழ்க்கையில் செட்டில் ஆக முடியும் என்று நினைக்கின்றார்.

அதற்காக ராகுல் ப்ரீத்சிங்கிற்கு பேஸ்புக்கில் ப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க, ராகுல் ப்ரீத் ஒரு கார்ப்ரேட் கம்பெனியே நடத்தும் அளவிற்கு பிஸி.

ஆனால் அவர் சென்னைக்கு கம்பெனி விஷயமாக வர, கார்த்தி அவரை சந்திக்க, பிறகு என்ன கார்த்தி ராகுல் மனதை கவர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
கார்த்தி அனைத்து செண்டர் ஆடியன்ஸுக்கான ஹீரோவாக இருக்கின்றார், காலரை தூக்கிவிட்டு படு லோக்கலாகவும் கலக்குகின்றார், அதே நேரத்தில் கூலர்ஸை மாட்டிக்கொண்டு மல்டி மில்லினியர் பையனாகவும் ஜொலிக்கின்றார், இந்த முறை மல்டி மில்லியனியர் மகனாக இந்த தேவ்வில் தோன்றியுள்ளார், வாழ்க்கையில் எதற்கும் கவலைப்படமால் ஜாலியாக பொழுதை கழிக்கும் போதும் சரி, தன் நண்பர்களுக்கு உனக்கு பிடித்த வாழ்க்கையை தேடு என்று அவர்களை நல்வழிப்படுத்துவது, ராகுல் ப்ரீத்துடன் ரொமான்ஸ் அடிப்பது என கலக்கியுள்ளார்.

ராகுல் ப்ரீத்சிங் இதுவரை நடித்த படங்களிலேயே அவருடைய கதாபாத்திரத்திம் கொஞ்சம் வலுவாக உள்ளது இந்த படத்தில் தான், எந்த ஆண்களையும் நம்பாமல் பணத்தை மட்டும் தேடும் பெண்ணாக இருந்துக்கொண்டு, அவர் வாழ்க்கையில் வரும் காதலை அவர் கையாளும் விதம் என மேல்தட்டு பெண்ணாகவே வாழ்ந்துள்ளார்.

ஆனால், இப்படி ஒரு காதல், மோதல் என இருக்கும் கதையை இன்னுமே கூட கொஞ்சம் ஜாலியாக எடுத்திருக்கலாம், படத்தின் முதல் பாதியில் ஆர் ஜே விக்கி, அமிர்தாவுடன் சேர்ந்துக்கொண்டு கார்த்தி அடிக்கும் லூட்டி, ராகுல் ப்ரீத்சிங்கை காதலிக்க வைக்க அவர் செய்யும் முயற்சிகள் எல்லாமே ரசிக்க வைக்கின்றது.

அப்படியே இரண்டாவது பாதிக்கு வந்தால் அங்கு தான் பிரச்சனை, ஏனெனில் கார்த்தி-ராகுல் ப்ரீத் சிங் இருவருக்குமே எந்த ஒரு இடத்திலுமே ஈகோ என்பதே இல்லை, பெற்றோர்களும் சம்மதித்துவிட்டனர், படம் முழுவதும் ஜாலியாக சுற்றிக்கொண்டு கிளைமேக்ஸில் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு ஈகோ மோதலை காட்டி அவர்கள் காதல் வேண்டாம் என சண்டை செய்வது எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

படத்தின் கிளைமேக்ஸ் எவரெஸ்ட் ஏறும் காட்சி ரசிக்க வைக்கின்றது, அட இதையே இரண்டாம் பாதி முழுவதுமே எடுத்திருக்கலாமே என்று சொல்ல வைக்கின்றது, என்ன காற்று வெளியிடை பார்ட் 2 பார்த்தது போல் இருந்திருக்கும்.

டெக்னிக்கலாக படம் பலமாகவே உள்ளது, அதிலும் ஒளிப்பதிவு ஏதோ ஹிந்தி படம் பார்ப்பது போல் உள்ளது, ஹாரிஸின் இசையில் ஏற்கனவே பல படத்தில் கேட்ட பாடல்கள் போலவே தான் அனைத்து பாடல்களுமே உள்ளது, பின்னணியும் அப்படியே, என்ன வழக்கம் போல் அது பிடிக்கவும் செய்கின்றது.

க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி, பீல்குட் படம் என்பது போல் ஜாலியாகவே செல்கின்றது.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுத்தவிதம்.

படத்தின் ஒளிப்பதிவு

பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி கதை ஒரு இலக்கே இல்லாமல் செல்வது, இன்னும் கூட நேரத்தை குறைத்திருக்கலாம்.

கார்த்தி-ராகுல்ப்ரீத்சிங் மோதலில் ஒரு அழுத்தமே இல்லை.

மொத்தத்தில் தேவ் காதலர் தினத்தில் வந்து காதலர்களுக்கான ஒரு படமாக இருக்கும். மற்றவர்களுக்கு???.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.