Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 09, 2019

நிதி மோசடியில் சிக்கிய மத போதகர் கைது !!!

Currently online
35 லட்சம் ரூபா பணத்தை வாங்கிவிட்டு கனடா நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி ஏமாற்றினார் – நம்பிக்கை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மத போதகரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள கிருஸ்தவ ஆலயத்தில் (கத்தோலிக்கம் அல்லாத) போதகராக கடமையாற்றுபவர், குருநகரைச் சேர்ந்த நபர் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைப்பதாகக் கூறியுள்ளார்.

கனடாவுக்கு அனுப்பி வைப்பதற்கு அந்த நபரிடம் 45 லட்சம் ரூபா பணம் வேண்டும் என்றும் போதகர் தெரிவித்துள்ளார். அதன்படி முதல்கட்டமாக 35 லட்சம் ரூபாவை வழங்குமாறு போதகர் கேட்டுள்ளார். முதல் கட்ட தொகையை போதகரின் வங்கியில் சம்பந்தப்பட்ட நபரால் வைப்பிலிடப்பட்டுள்ளது.

வங்கியில் பணம் வைப்புச் செய்து ஒரு வருடகாலமாகியும் கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் போதகர் செய்யவில்லை. அதனால் பணத்தை வைப்பிலிட்ட நபர், வங்கியில் வைப்புச் செய்த சிட்டையை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாட்டை வழங்கினார்.

அத்துடன், முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்புப் பொலிஸார், சந்தேகநபரை கைது செய்தனர். அவரை  யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தினர்.

மேலும் சந்தேகநபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளன.  சில முறைப்பாடுகள் அவருக்கு எதிராக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்குத் தொடர்பிலும் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் அவரை பிணையில் விடுக்கவேண்டாம்” என்று சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.