Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 18, 2019

தளபதியை புகழ்ந்து பேசிய தல !!

Currently online
இளைய தளபதியின் நடனத்தை பாராட்டி தல அஜித் புகழ்ந்து பேசியுள்ள தகவல் அவர்களது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் அஜித் ரசிகர்கள் எப்போதுமே சமூகவளைதளங்களில் மோதிக்கொள்ளும் சூழலில் சம்மந்தப்பட்ட நடிகர்கள் இன்றும் நட்புடனே இருக்கின்றனர். 

சில சந்தர்ப்பங்களில் அஜித் - விஜய் ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதும் உண்டு. மங்காத்தா படத்தின் செட்டிற்கு விஜய் சென்றது அவர்களின் ரசிகர்களிடையே முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தற்போது துணை நடிகர் ரமேஷ் திலக் அஜித்துடன் விஸ்வாசத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

'விஸ்வாசம்' படப்படிப்பு போது, கேரவனில் அஜித்துடன் அமர்ந்திருக்கும் போது விஜய்யின் தெறி பாடல்கள் டிவியில் பார்த்த போது அஜித் கூறியதை ரமேஷ் திலக் பகிர்துள்ளார். “விஜய் பிறக்கும் போதே ஒரு டான்சராக பிறந்துள்ளார்” என்று அஜித் சாதாரணமாக கூறியதாக ரமேஷ் தெரிவித்தார். மேலும் தமிழ் சினிமா நடிகர்களில் வெகுசிலருக்கே உள்ள எளிதாக நடனம் ஆடும் திறமை, விஜய்க்கு இயல்பிலேயே உள்ளதாகவும் அவர் கூறியதாக சொல்கிறார் ரமேஷ் திலக்.

இந்த செய்தி அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ரசிகர்கள் தங்கள் முக்கிய எதிரியாக கருதும் அஜித்திடம் இருந்து விஜய்க்கு கிடைத்துள்ள பாராட்டை பெருமையாக கருதுகின்றனர். அஜித்தின் அடக்கத்தையும் பணிவையும் அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.