Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 20, 2019

உங்களுக்கு பிடித்த நிறம் இதுவா? அப்போ உங்கள் குணம் இது தான் !!

Currently online
உங்களுக்கு பிடித்த நிறம் உங்கள் குணங்களைச் சொல்லும். அதே போல் உங்கள் நண்பர்களின் குணங்களையும் அறியலாம். 

வெள்ளை
தூய்மை, தீங்கின்மை மற்றும் எளிமையை குறிக்கும் வெள்ளை நிறம். இளமை மற்றும் தூய்மையின் மீது திடமான சித்தாந்தங்களை கொண்டுள்ளது.

நீங்கள் பூரணத்துவம் மற்றும் இயலாத கொள்கைகளின் மீது ஆர்வம் கொண்டவராக இருப்பீர்கள். மேலும் எளிய வாழ்க்கையின் மீதான நாட்டத்தையும் இது குறிக்கும்.

சிவப்பு

வலிமை, ஆரோக்கியம் மற்றும் உற்சாகத்தை சிவப்பு நிறம் குறிக்கும்.

வெளிப்படை, ஆக்கிரமிப்பு, தீவிரம் மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர்களுக்கு பிடித்த நிறமாக இது இருக்கும்.

இந்த நிறத்தை விரும்புபவர்கள் நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், சலிப்பூட்டுவதை தாங்கி கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.

றோஸ்

பிங்க் நிறம் பிடித்தவர்கள் அன்பை எதிர்பார்ப்பார்கள். அதேபோல் காதலிக்கப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எதிர்ப்பார்ப்பார்கள்.

தங்களை மென்மையானவர்களாக காட்டிக் கொள்ள அவர்கள் விரும்புவார்கள். வசீகரம் மிக்கவராகவும், கனிவான உள்ளம் கொண்டவராகவும் இருப்பார்கள்.

செம்மஞ்சள் 

அலங்காரமான மற்றும் குதூகலத்தை விரும்பும் நபராக இருந்து, சமுதாயத்தோடு நெருங்கி பழகுபவர்களுக்கு, ஆடம்பரம் மற்றும் இன்பத்தை குறிக்கும் இந்த நிறம் பிடிக்கும். இவர்கள் சற்று நாடகத்தனமாக இருப்பார்கள். அதனால் இவர்கள் கவனிக்கப்படுவார்கள்.

ஆனாலும் கூட அவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

மஞ்சள்

மஞ்சள் நிறத்தை விரும்புபவர்கள் சந்தோஷம், அறிவு மற்றும் கற்பனைவளம் நிறைந்தவர்களாக இருப்பர். மன ரீதியாக துணிவை கொண்டவர்கள்.

புதுமை மற்றும் சுய பூர்த்தியை தேடி அலைவார்கள். நல்ல வணிக தலைமை மற்றும் நகைச்சுவை உணர்வை கொண்டவர்களுக்கும் இந்த நிறம் ஒத்துப்போகும்.

பச்சை

நல்லிணக்கம் மற்றும் சமநிலையின் நிறமானது பச்சை. நம்பிக்கை, புதுப்பித்தல் மற்றும் அமைதியையும் குறிக்கும். மென்மையாகவும், உண்மையாகவும் இருப்பவர்களுக்கு இந்த நிறம் பிடிக்கும்.

சுய புறக்கணிப்பு, எளிமை மற்றும் பொறுமைசாலியாகவும் இவர்கள் இருப்பார்கள். அதனால் மற்றவர்களால் மிக எளிதாக சுரண்டப்படுவார்கள்.

மேலும் இவர்கள் நாகரிகமானவர்களாகவும், மரியாதைக்குரியவர்களாகவும் இருப்பார்கள்.

நீலம்

மென்மையான, இதமளிக்கக்கூடிய, இரக்கம் மற்றும் அக்கறை குணங்களை கொண்டுள்ளவர்களின் நிறம் நீலம். ஆழ்ந்த சிந்தனை, சுய பரிசோதனை, பழமைவாதம் மற்றும் கடமைக்கான நிறமாகும் இது.

இந்நிறத்தை விரும்புபவர்கள் பொறுமை, விடா முயற்சி, நேர்மை, உணர்ச்சிமிக்க மற்றும் சுய கட்டுப்பாடுகளை கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் நிலையான குணம் மற்றும் அறிவுக்காக தாங்கள் பாராட்டப்பட வேண்டும் என நினைப்பார்கள்.

உண்மையுள்ளவர்களாக இருந்தாலும் கூட நெகிழ்வற்ற நம்பிக்கைகளுக்காக கவலை கொள்பவர்களாக இருப்பார்கள்.

ஊதா

இந்த நிறத்தை விரும்புபவர்கள் தனித்துவம் வாய்ந்த, நகைச்சுவை உணர்வு மிக்க மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள்.

மேலும் தனித்துவத்துடன் வேறுபட்டு இருக்க தீவிர நாட்டத்துடன் இருப்பார்கள். எளிதில் கோபம் அடைகிற, பிரமாண்டமான மற்றும் கலையாற்றல் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.