Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 02, 2019

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (02.03.2019)

Currently online
மேஷம்
உணர்ச்சி பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

ரிஷபம்
மதியம் 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக்கொண்டிருக்க வேண்டாம். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக்காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள். 

மிதுனம்
குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் உடல்நிலை சீராகும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 3 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும் நாள்.

கடகம்
சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீட்டை  புதுப்பிப்பது குறித்து யோசிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அமோகமான நாள்.

சிம்மம்
சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். புது நட்பு மலரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள். 

கன்னி
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் கணிசமாகலாபம் உயரும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 

துலாம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். 

தனுசு
மதியம் 3 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.  மாலைப்பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.  

மகரம்
ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 3 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள். 

கும்பம்
குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதுத்தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். இனிமையான நாள். 

மீனம்
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.