'டார்லிங்' இயக்குனர் சாம் அன்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் 100. காவியா வேணுகோபால் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் அதர்வா பொலிஸாக நடிக்க ஹன்சிகா அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ள இப்படத்திற்கு ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது இந் நிலையில் தற்போது இப்படம் மே 3ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்த படத்தில் அதர்வா சத்யா என்ற பொலிஸ் கரக்டரில் நடிக்கிறார். 100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.