Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 13, 2019

தலீபான்கள் தாக்குதலில் 11 பொலிசார் பலி !!

Currently online
ஆப்கானிஸ்தானில் பொலிஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 11 பொலிசார் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு இவர்கள் பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் பொலிசாரை குறிவைத்து தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர்.

இந் நிலையில், தலைநகர் குவாலா இ நவ்வில் முகூர் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் சோதனை சாவடி மீது நேற்று முன்தினம் நள்ளிரவு தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 

அவர்களுக்கு பொலிசார் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பொலிசார் பலியாகினர். 

அதே சமயம் இந்த சண்டையின் போது பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர். ஆனால் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.