Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 14, 2019

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (14.03.2019)

Currently online
மேஷம்
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

ரிஷபம்
இன்றும் நண்பகல் 12.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். வேலைகளை  உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.

மிதுனம்
குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவது நல்லது. லேசாக தலை வலிக்கும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பகல் 12.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். சிறப்பான நாள்.

சிம்மம்
தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல்போன முக்கிய ஆவணம் கிட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கன்னி
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.

துலாம்
நண்பகல் 12.45 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். கடின உழைப்பால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். நண்பகல் 12.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

தனுசு
பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

மகரம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.