Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 15, 2019

சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனப் பிரஜைகள் 14 பேருக்கு சிறைத் தண்டனை !!

Currently online
அண்மையில் தடல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் 14 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


குறித்த சீனப் பிரஜைகள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்ததற்காக ஒரு வருட சிறை தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (14) குறித்த நபர்களை காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெ முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவர்கள் கட்டட நிர்மாண பணிக்கான உதவியாளர்களாக பணியாற்றி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.