Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 14, 2019

ஆசிரியரின் செயலால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !!

Currently online
பாடசாலை ஒன்றில் கல்வி செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என தெரிவித்து ஆசிரியர் தாக்கியதால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

குறித்த சம்பவம் மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் காத்தான்குடி பகுதியிலுள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விகற்கும் 17 மாணவர்கள் மீதே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் தாக்கியதால் 17 மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காத்தான்குடி பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.