Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 11, 2019

சீட்டுப் பணம் செலுத்த முடியாததால் 19 வயது இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை !!

Currently online
வீடொன்றிலிருந்து 19 வயதுடைய இளம் தாயொருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று(10) மீட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாவடிவேம்பு -02, மணிவாசகர் வீதியை அண்டிய பகுதியில் வசித்து வந்த சிவானந்தம் ஜானு என்ற இளம் தாயின் சடலமே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸாரும் தடயவியல் பொலிஸ் குழுவினரும் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

உயிரிழந்த பெண் வாராந்த சீட்டுப் பணம் செலுத்துவற்கும், தவணை அடிப்படையில் பணம் செலுத்துவதாகப் பெற்றுக் கொண்ட உடுதுணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என்பனவற்றுக்கான பணத்தைச் செலுத்துவதற்கும் வசதிவாய்ப்பின்றி, விரக்தியில் இருந்து வந்ததாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.