Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 19, 2019

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (19.03.2019)

Currently online
மேஷம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். வருமானம் உயரும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்
கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க புதுவழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். 

கடகம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வராது என்றிருந்த பணம் வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

சிம்மம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கிக் கொடுப்பதில் ஈடுபட வேண்டாம். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாறவேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கன்னி
மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்
எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம்
நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

மகரம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய நாள்.

கும்பம்
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்கூடும். பழைய கடன் பிரச்சனை தீரும். தாயாரின் உடல் நிலை சீராகும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மீனம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.