Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 13, 2019

காதல் விவகாரம் ; 19 வயது பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்த இளைஞன் !!

Currently online
காதலை ஏற்க மறுத்ததால் 19 வயது பெண்ணை பெற்றோல் ஊற்றி எரித்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கேரளாவின் திருவல்லா என்ற இடத்தில் அஜின் ரெஜி மேத்யூ என்பவர் கல்லூரிக்கு செல்ல முயன்ற ஒரு பெண்ணைத் தடுத்து நிறுத்தி பேசியுள்ளார். 

அப்போது தான் மறைத்து வைத்திருந்த பெற்றோலை எடுத்து ஊற்றி, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அப்பெண் மீது தீவைத்துக் கொளுத்தியுள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், தீயை அணைத்து பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். 19 வயதே ஆன அந்த பெண் 60 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் மேத்யூவை அங்கு இருந்த பொதுமக்கள் அடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில், மேத்யூ கடந்த  2 ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் பழகி வந்ததாகவும், பின் தம்மை விட்டு விலகியதால் கோபமடைந்து பெண்ணை தீவைத்துக் கொன்று, தாமும் தற்கொலை செய்து கொள்ள இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.