Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 20, 2019

3 பிள்ளைகளின் தந்தை மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு !!

Currently online
மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம்  நேற்று(19) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஆலங்குளம் பகுதியில் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆலங்குளம் கிராமத்தில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான சின்னையா சுப்பிரமணியம் (வயது-46) என்பவராவார்.



கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது  கணவரை  சில நபர்கள் தாக்கியதாகவும் இது குறித்து தான் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும்  அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தனது கணவனை வீட்டில் காணாது தேடியபோது, வீட்டின் பின்னாலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளர்.


குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.