Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 20, 2019

விஷவாயு கசிவால் 3 பேர் பரிதாப பலி !!

Currently online
மகாராஷ்ட்ராவில் கிணற்றிலிருந்து திடீரென பரவிய விஷவாயு கசிவால் 3 விவசாயிகள் உயிரிழந்தனர். 

ஒளரங்காபாத்தில் ஜனார்த்தன் சிபுல் என்பவர் தனது மின்மோட்டரை பரிசோதிப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். 

அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் இருந்து விஷவாயு தாக்கியதில், அவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். 

ஜனார்த்தன் சிபுலைக் காணாததால், 6 விவசாயிகள் அவரைத் தேடி கிணற்றிற்குள் இறங்கியுள்ளனர். அவர்களையும் விஷவாயு தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் மேலும் 2 பேர் சம்பவ இடத்தில் முச்சுத்திணறி உயிரிழந்தனர். 

மூச்சுத்திணறலுக்கு ஆளான 4 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.