Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 23, 2019

பறக்கும் படையின் அதிரடி ; ரூ.43 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் !!

Currently online
கோவை ஒண்டிபுதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 43 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் எபிக்ஸ் கேஷ் வேர்ல்டு மணி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. 

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஜெயராம் என்ற ஊழியர், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பணத்துடன் விமான நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒண்டிபுதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படை அதிகாரிகள், ஜெயராம் வாகனத்தினை சோதனையிட்டனர். 

அதில் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளின் கரன்சிகள் இருப்பது தெரியவந்தது. இதன் இந்திய மதிப்பு, 43,44,900 ரூபாயாகும். சோதனையின் போது, தனியார் நிறுவனத்தின் சார்பில் முறையான ஆவணங்கள் அளிக்கப்பட்டன. 

எனினும், பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பதால், பணத்தை பறிமுதல் செய்து, அதனை வருமான வரித்துறையிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.