Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 15, 2019

சுற்றிவளைப்பின் போது புதையல் தோண்டிய 4 பேர் கைது !!

Currently online
காணி ஒன்றில் புதையல் பெறும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் ஹினிதும பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்கல்ல, தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹினிதும பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்று மாலை கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தங்காலை, மீகொட மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹினிதும பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.