Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 27, 2019

4ஆம் வகுப்பு மாணவனுக்கு சூடுவைத்த ஆசிரியை கைது !!

Currently online
திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையம் அருகே வீட்டுப்பாடத்தை தவறாக எழுதியதற்காக மாணவனுக்கு சூடுவைத்த தனியார் பள்ளி ஆசிரியை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4ஆம் வகுப்பு படிக்கும் பாதிக்கப்பட்ட மாணவனுடைய பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில், ஆசிரியையும், அப்பள்ளியின் தாளாளரின் மகளுமான ரம்யா என்பவர் மெழுகுவர்த்தியை பற்றவைத்து உருகிய மெழுகை மாணவனின் கையில் ஊற்றி சூடுவைத்தது தெரியவந்துள்ளது.

மாணவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவர்களை துன்புறுத்துதல் பிரிவின்கீழ் ஆசிரியை ரம்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.