Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 21, 2019

இத்தாலியில் பயங்கரம் ; 51 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்துக்கு தீ வைப்பு !!

Currently online
இத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, அதன் ஓட்டுநரால் கடத்தப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் குடியுரிமை பெற்ற 47 வயதான அந்த ஓட்டுநர் மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகள் கொத்து கொத்தாக மரணமடைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே இதை செய்ததாக தெரிவித்துள்ளார். 

சம்பவத்தன்று அந்த ஓட்டுனர் உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி 51 மாணவர்களை பள்ளி பேருந்தில் ஏற்றி சென்றுள்ளார்.

பயண நேரத்தின் போது மாணவர்களை அச்சுறுத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் மாணவர்களின் மொபைல் போன்களை கைப்பற்றிய அந்த ஓட்டுனர் மாணவர்களின் கைகளை கட்டி துன்புறுத்தியுள்ளார். இதனிடையே அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த மொபைல் போன் மூலம் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து வந்தனர். இதை அறிந்த அந்த நபர் பேருந்தில் பெற்றோலை உற்றி தீ வைத்துள்ளார். 

உடனடியாக அங்கு வந்த பொலிசார் பேருந்தின் பின்னால் அமைந்துள்ள அவசர கால வாசலை உடைத்து மாணவர்களை காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மாணவர்கள் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இந்நிலையில் பேருந்து ஓட்டுனரை கைது செய்த பொலிசார் அவர் மீது படுகொலை மற்றும் ஆட்கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.