Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 25, 2019

நுவரெலியாவில் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ; இருவர் பலி 59 பேர் படுகாயம் !!

Currently online
தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 59 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்து வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன, பகுதியில் நேற்று (24) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து நுவரெலியா வலப்பனை வழியாக அம்பாறை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பேருந்து  மாஹாஊவாபத்தன எனும் இடத்தில் பாரிய வளைவு பகுதியில் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது, பேருந்தில் பயணித்த 61 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்களை உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து அணைவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

இதன்போது வலப்பனை வைத்தியசாலையில் வைத்து 28 வயது மதிக்கதக்க அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

இதேவேளை, நுவரெலியா வைத்தியசாலையில் வைத்து கர்ப்பிணி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
மேலும் கவலைக்கிடமாக இருந்த சிலரை கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே குறித்த பாரிய வளைவு பகுதியில் பேருந்தை செலுத்த முடியாததன் காரணமாகவே, இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

வலப்பனை பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.