Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 26, 2019

இன்று இரவு 9 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு !!

Currently online
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, கொழும்பின் சில பகுதிகளில் இன்று (26) இரவு 9.00 மணி முதல் 9 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், மட்டக்குளி (கொழும்பு 13, 14, 15)  ஆகிய பிரதேசங்களில் குறித்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர இக்காலப் பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களில், குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.