Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 01, 2019

பரந்தனில் சொகுசு பேரூந்து மரத்துடன் மோதி கோர விபத்து ; நால்வர் படுகாயம் !!

Currently online
தனியாருக்கு சொந்தமான சொகுசு பேரூந்து ஒன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில், பேரூந்து சாரதி உட்ப்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சொகுசு பேரூந்து யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தவேளை பரந்தன் சந்தியை கடக்க முற்பட்ட போது, முல்லை வீதியில் இருந்து திடீரென டிப்பர் ரக வாகனம் ஒன்று யாழ் நோக்கிய வீதிக்கு ஏறியுள்ளது.

இந் நிலையில் பயணிகளின் நலன் கருதி பேரூந்து சாரதி வீதியின் மறுபுறத்திற்கு பேரூந்தை செலுத்தி விபத்தை தவிர்க்க முற்ப்பட்ட போதும், வீதியின் மறு புறத்தில் இருந்த மரத்துடன் பேரூந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.