Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 01, 2019

நடுரோட்டில் இளம்பெண் கொடூரமாக வெட்டிக் கொலை !!

Currently online
மர்ம நபர்களால் இளம் பெண் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

புதுச்சேரியை அடுத்த மடுகரையில் 27 வயதுடைய கங்கா என்ற பெண் தனது இரு ஆண் குழந்தைகைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை கடையில் பால் வாங்கி கொண்டு வீட்டிற்கு செல்லும் போது இரு சக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நடுரோட்டில் வைத்து அவரை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதில் கங்கா சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியானார். 

உயிரிழந்த கங்கா 8 வருடங்களுக்கு முன்பு ராஜீ என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்.

தனது கணவருடன் ஏற்பட்ட மனவருத்தத்தால் கங்கா மடுகரையில் இரண்டு வருடங்களுக்கு முன் தனியாக வீடு எடுத்து தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 

கங்காவின் கணவரான ராஜீ அடிக்கடி வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதால் மடுகரை புறக்காவல் பொலிசார் அவரிடமும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.