Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 21, 2019

கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாப பலி !!

Currently online
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மண்டைதீவை சேர்ந்த ஜோன் அன்ரனி டினேஷ் (19) என்பவராவார்.

நேற்று குறித்த இளைஞன் படகில் தனது நண்பருடன் சென்று கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த வேளை கடல் காற்றின் வேகம் அதிகரித்தமையால் படகு கவிழ்ந்துள்ளது.

இதையடுத்து படகிலிருந்த இரு இளைஞர்களும் கடலில் நீந்தி கரை திரும்ப முற்பட்ட போதிலும் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார், மற்றையவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.

இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞனின் சடலத்தை சக மீனவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.