
பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள இச்சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், கோரக்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி, அரசு போட்டித் தேர்வுகளுக்கு படித்து வந்தார்.
இந் நிலையில், அந்த பெண்ணின் வீட்டில் இருந்து இரத்தம் வெளியே வந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
உள்ளே அந்த பெண்ணும், பிறந்த குழந்தையும் இறந்து கிடந்துள்ளனர். அந்த அறையை பொலிசார் சோதனை செய்ததில், அப்பெண் யூடியூப்பை பார்த்து, தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான அந்த பெண் யாருக்கும் தெரியாமலேயே தனக்கு தானே பிரசவம் பார்க்க முயற்சித்துள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.