Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 09, 2019

அழகிய தருணம்.............!!!!!! வன்னியூர் இனியவள்

Currently online
ஆயிரம் ஆயிரம் மலர்கள் 
மழையெனப் பொழிகிறதே
ஆனந்தச் சாரல் வந்து
என்னைத் தழுவிடுதே

உலகத்து இன்பமெல்லாம் 
ஒட்டு மொத்த குத்தகையாய்
எந்தனது உள்ளத்தில் 
இடம்பிடித்து நிற்கிறதே

மூவெட்டுத் திங்கள்
கடந்திட்ட பின்பே
என் உயிர் நட்பின்
குரல் கேட்டேன் இன்றே

மண் தொட்ட நாள் முதல்
மலர்ந்திட்ட உயிர் நட்பு
என் வாழ்வுப் பாதையெல்லாம்
கூடவே வந்த சொத்து

தொடர்பற்று இரு வருடம்
தொலைந்திற்ற மகிழ்வெல்லாம்
பற்பல மடங்காகி
பூக்குதே நெஞ்சத்தில்

கடந்திற்ற இருளெல்லாம்
கரைந்தே போகட்டும்
வருங்காலம் உந்தனுக்கு
வரமாகும் என் தோழா

               நன்றி 
வன்னியூர் இனியவள்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.